அவுஸ்திரேலியாவுடன் இரண்டாவது போட்டியிலும் இந்தியாவிற்கு வெற்றி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (26.11) திருவானந்தபுரத்தில் 2 ஆவது T20 போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 44 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதுடன் 5 போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என முன்னிலையில் உள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்தியா அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடி நிகழ்த்தி நிகழ்த்தி வந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்றது. இதில் ருத்ராஜ் கெய்க்வாட் 58(43) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 53(25) ஓட்டங்களையும், இஷான் கிஷன் 52(32) ஓட்டங்களையும் பெற்றனர். யஷஷ்வி ஜெய்ஸ்வாலின் 2 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். ருத்ராஜ் கெய்க்வாட்டின் 3 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்து கொண்டதுடன் இஷான் கிஷனும் அவரது 6 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். பந்துவீச்சில் நேதான் எல்லிஸ் 3 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது. இதில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 45(25) ஓட்டங்களையும், மத்தியூ வேட் ஆட்டமிழக்காமல் 42(23) ஓட்டங்களையும், டிம் டேவிட் 37(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்ணோய் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், அக்சார் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர்.

இந்த போட்டியின் நாயகனாக யஷஷ்வி ஜெய்ஸ்வால் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version