பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் விரைவில் விநியோகம் – கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (27.11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் பயிலும் 7,40,000 சிறார்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply