விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியிலிருந்தும், நீர்ப்பாசன அமைச்சர் பதவியிலிருந்தும் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் உள்ளடக்கிய கடிதத்தை, ஜனாதிபதி, அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்விற்கு வருகை தந்த போதே, ஜனாதிபதியால் இந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர் பொலநறுவை மாவட்டத்தில், பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டி, பாராளுமன்றத்திற்குள் வந்தவர் எனினும், அதன்பின்னர் சுயாதீனமாக நின்று ஜனாதிபதி ரணில் இன் தலைமையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, நீர்ப்பாசன அமைச்சராக கடமையாற்றினார்.

தற்போது அரசாங்கத்தின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply