ரயில் சேவையில் தாமதம்!

காலியில் இருந்து மாத்தறை நோக்கி இயக்கப்படும் ரயில் சேவை கும்பல்கம நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பிரதான ரயில் பாதை தடைப்பட்டுள்ளதுடன் மாத்தறையில் இருந்து காலி நோக்கிய அனைத்துப் பாதைகளும் தாமதமாகச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்ட புகையிரதம் வெலிகம புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply