மட்டக்களப்பில் 118 மி.மீ மழை விழ்ச்சி பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28.11) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த அதிக பட்ச மழை வீழ்ச்சியாக 118 மில்லி மீட்டர் மழை நவகிரியில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான மட்டக்களப்பில் 46.7மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுக்குளத்தில் 21 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சையில் 33 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பிரதேசத்தில் 31மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

மேலும் பாசிக்குடாவில் 31 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 35 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக மயிலம்பாவெளியில் 10 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் சுப்பிரமணியம் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version