புகையிரத்துடன், பேருந்து மோதி விபத்து!

இன்று (29.11) அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று அளுத்கமவில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படவுள்ள விமானத்தில் பயணிக்கவிருந்த சுற்றுலா பயணிகள் குழுவொன்றே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளது.

இந்த விபத்து காரணமாக கடலோர ரயில் பாதையில் ஒரு வழிப்பாதையில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version