இப்போது இருப்பது போன்ற அப்பாவியான எதிர்க்கட்சித் தலைவரை தாம் பார்த்ததில்லை என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (29.11) எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்திற்கு வராததால்தான் வரவு செலவுத் திட்ட விவாதத்தை குறித்த நேரத்தில் ஆரம்பிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட தினத்தன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கு முதலில் மருந்து வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.