பசறையில் தீ விபத்து!

பசறை நகரில் நேற்று இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மசாலா மற்றும் மசகு எண்ணெய் விற்கும் இரண்டு கடைகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.

மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோதிலும், இரு கடைகளும் முழுமையாக சேதமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version