கட்டுடல் பேணும் சாக்லெட் ஹீரோ மகி

தொண்ணூறுகளில் பிறந்த எல்லோரதும் விருப்பிற்குரிய நடிகராக வலம்வந்தவர்தான் நடிகர் மாதவன்.1996 ம் ஆண்டு சண்டல்வூட் விளம்பரமொன்றில் நடிக்க ஆரம்பித்து பின்னர் மணிரத்தினத்தின் இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்திருந்தார். சாக்லெட் போ(b)யாக நடிப்பில் இரசனையை பேணிவந்த இவர் அலைபாயுதே திரைப்படத்தின் பின்னர் தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், ஆயுத எழுத்து போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரை உலகிற்கே தன்னை முன்னணி நடிகராக ஆக்கிக்கொண்டார். நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பணியாற்றும் இவர் 3 இடியட்ஸ் உட்பட்ட பல ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.இடையில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அமையாத போதும் மீண்டும் இறுதிச்சுற்று திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் மீள இணைந்துள்ளார். தற்போது விக்ரம் வேதா, மாறா போன்ற சிறந்த கதைகளை தெரிவு செய்து தன்னை இரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார். நடிப்பிற்காக தனது உடலை கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் பொருட்டு பயிற்சியில் ஈடுபட்டுவரும் இவர் தனது புகைப்படங்களை மகியின் உடம்பு மீண்டும் குறைந்துவிட்டதென இரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். இந்தப்புகைப்படத்தில் அவர் இளமையாக இருப்பதுடன் இரசிகர்கள் அவரிடம் நீங்கள் முகச்சவரம் செய்தால் மீண்டும் எமது சிறுவயது சாக்லெட் ஹீரோ மகியை காணமுடியும் என பதிவிட்டுவருகின்றனர் .

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version