யாழ் வைத்தியசாலை பொறுப்புகளை மீண்டும் பெற்றார் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பொறுப்பினை மீண்டும் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். வெளிநாட்டுக்கு உயர் கல்விக்காக சென்றிருந்த சத்தியமூர்த்தி விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்தார். இலங்கையிலும், யாழ்ப்பாணத்திலும் காணப்படும் மோசமான கொரோனா நிலையினை கருத்திற் கொண்டு தற்காலிகமாக மீண்டும் பதவியினை பொறுப்பேற்றுள்ளார். நிலைமை சீரடைந்ததும் மீண்டும் வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இவர் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் பதில் பணிப்பாளர், பணிப்பாளர் கடமைகளை செயற்படுத்தி வந்திருந்த நிலையிலேயே வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மீண்டும் பணிப்பாளருக்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

யாழ் வைத்தியசாலை பொறுப்புகளை மீண்டும் பெற்றார் சத்தியமூர்த்தி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version