குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் உட்பட 3 பாடசாலை மாணவர்கள் நேற்று காலை மெட்டியகனே மஹாவெவவில் நீராடச் சென்ற வேளையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து சக மாணவர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் ஏற்கனவே மாணவர் உயிரிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.