பிரான்சில் இடம்பெற்ற கத்தி குத்தில் ஒருவர் உயிரிழப்பு

பிரான்சின் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள Quai de Grenelle இல் உள்ள சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய பிரான்சிய பிரஜை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 2016 இல் மற்றொரு தாக்குதலுக்கு சதி செய்ததற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பிரான்ஸ் பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு பட்டியலில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version