விமான நிலையத்தில் பெண்கள் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரும், யாழ்ப்பாணம் வெல்வெட்டித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானப் போக்குவரத்து அனுமதிக்காக இவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து விமான நிலைய அதிகாரிககள், இருவரையும் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

அதன்படி சந்தேக நபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version