தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பணம் தேட முயற்சித்த தந்தை ஒருவர் தன் மனைவியால் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் குளியலறையில் ஒளிந்துகொண்டு குறித்த நபர் மீது அவரது மனைவி மிளகாய் தூளை வீசியதாகவும், பின்னர் வெளியே வந்த கணவனை மனைவி வெட்டிக் கொன்றதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து , பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் இருந்து வந்துள்ளதாகவும் அதற்காகவே தனது மகளின் நிர்வாண புகைப்படத்தை எடுக்க முயன்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.