நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம் குறித்து கைதான மேற்பார்வையாளர் விளக்கமறியலில்

நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தபட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மரணமடைந்த சிறுவனின் தந்தை முன்னிலையாகி இருந்ததுடன் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகளின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடபட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version