உலக மண் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிரமதான நிகழ்வு!

உலக மண் தினத்தை முன்னிட்டு உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்றைய தினம் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை இடம் பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக A9 வீதி, ஹொரவபொத்தான வீதி மற்றும் மன்னார் வீதிகளின் இரு மருங்கிலுமுள்ள பிளாஸ்டிக், பொலித்தீன், போத்தல் மற்றும் டின்கள் என்பன மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சேகரித்து அகற்றப்பட்டுள்ளன.

உலக மண் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிரமதான நிகழ்வு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version