உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் மாணவர்கள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் படி, இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.