இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பாபட்லா அருகே மிக்ஜம் சூறாவளி கரையை கடந்துள்ளது.
பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை மிக்ஜம் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக கரையை கடந்தது.
பாபட்லா- ஓங்கோல் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி கரையை கடந்த நிலையில் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரையை கடந்தவுடன் மிக்ஜம் சூறாவளியானது புயலாக வலுவிழந்து பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மிக்ஜம் சூறாவளி எதிரொலியால் ஆந்திராவில் 314 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.