”அடுத்த ஜனாதிபதி இப்படி தான் இருக்க வேண்டும்” – பிரசன்ன ரணதுங்க

இலங்கையில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி அனைவரின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த வருடம் நடைபெறும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மின்சார கட்டணத்தில் குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (06.12) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version