மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ மற்றும் ‘எச்’ வார்டுகள் என்பன சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளபோது, 33 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 35 சிம் கார்டுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சிம்கார்டுகளை மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.