அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது…

மருத்துவ விநியோகத் துறையில் இன்னும் 156 வகையான அத்தியாவசிய மருந்துகள் போதுமானதாக இல்லை என்றும் மேலும் 110 மருந்துகளின் இருப்பு ஒரு மாத காலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகவும் வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏத்திவரு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 300 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், 86 வகையான மருந்துகள் மருத்துவமனை மருந்தகங்களிலும் கூட கிடைப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல நோயாளர்கள் இதனால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாகவும், இந்த விடயம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version