நாளை (09.12) முதல் அமுலாகும் வகையில் மதுபானசாலைகள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் 52வது அதிகாரசபையின் உட்பிரிவு 32-1 இன் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுபான சில்லறை (பார்) விற்பனை உரிமத்தின் கீழ் உள்ள மதுபான சாலைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாத விடுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வெளியிடங்களில் மது அருந்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி பெற்ற விடுதிகளில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபானம் விநியோகிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை மூடப்பட்ட நடைமுறை இனி இல்லாமல் போகிறது.