அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணம்..!

அரச அதிகாரிகளுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முற்பணத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 4 ஆயிரம் ரூபா முற்பணமாக வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்ளநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முற்பணத்தொகை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 29ம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

திறைசேரியின் உடன்படிக்கைக்கமைய, அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், சுற்றரிக்கை மூலம் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த முற்பணம் 2024ம் ஆண்டிற்குள் வருமானமாக ஈட்டப்பட வேண்டும் என சுற்றரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version