கொழும்பு – பதுளை வீதியினூடான ஹாலிஎல , உடுவர பகுதியிலிருந்து அனைத்து தொலைதூர பஸ் சேவைகளும் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஹாலிஎல, உடுவர வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று பிற்பகல் முதல் கனரக வாகனங்களின் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எட்டம்பிட்டிய – மாலிகாதென்ன ஊடாக பண்டாரவளை வீதியை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பண்டாரவளையில் இருந்து இலகுரக வாகனங்களுக்கு மாத்திரமே வீதி திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.