கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகளால் 297 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக 550க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.