இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணிக்கு அதிர்ச்சி தோல்வி. பங்களாதேஷிற்கு முதலிடம்

இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று (11.12) ICC அக்கடமி, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 7 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்று தங்களது இந்த ஆசிய கிண்ணத்தின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி களத்தடுப்பாய் தெரிவு செய்தனர்.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்றது. இதில் டினுற கலுபஹான ஆட்டமிழக்காமல் 56(87) ஓட்டங்களையும், சினெத் ஜெயவர்தன 49(65) ஓட்டங்களையும் பெற்றனர். ஆயன் அப்சல் கான், ஓமிட் ரஹ்மான் 2 விக்கெட்களையும், ஹர்டிக் பய், துருவ் பரஷர், அய்மன் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது. இதில் டனிஷ் சுரி 75(88) ஓட்டங்களையும், ஆயன் அப்சல் கான் 33(50) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கருக சங்கெத் 3 விக்கெட்களையும், மல்ஷா தருபதி, விகாஸ் தெவ்மிக, விஷ்வ லஹிரு, டுவிந்து ரணதுங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பங்களாதேஷ் 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஜப்பான் 19 வயதிற்குட்பட்ட அனிங்களுக்கிடையில் இன்று ICC அக்கடமி 2, டுபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஜப்பான் அணி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 99 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் சரியாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் மஹ்பிஸுர் ரஹ்மான் ரப்பி, அரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், இக்பல் ஹொசைன் எமன், மறுப் மிரிடா, ரொஹனட் டௌல்லா போர்சன், ஷெய்க் பவெஸ் ஜிபொன், செளவ்டுர் MD ரிஸ்வான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி ஆட்டமிழக்காமல் 55(45) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சார்ள்ஸ் ஹின்ஸ் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version