2024ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2024ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைக்கபெற்றுள்ளதுடன், ஒருவர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான தர்க்கம் இடம்பெற்ற நிலையில் மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஆளுங்கட்சி வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், எதிர்க்கட்சி செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.

தேசிய மக்கள் சக்தியும் எதிராகவே வாக்களித்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க, பட்ஜெட்டுக்கு எதிராகவும், வடிவேல் சுரேஷ் இரண்டாம் வாசிப்பை போன்று பட்ஜெட்டை ஆதரித்து வாக்களித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version