VAT அதிகரித்தால் பணவீக்கம் அதிகரிக்கும்..!

VAT அதிகரித்தால் பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வரிக் கொள்iயினை மாற்றாவிட்டால் எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தினை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2024 வரவு செலவுத் திட்டம், பெறுமதி சேர் வரிச் சட்டமூலம் மற்றும் நிதிச்சட்டமூலம் என்பனவற்றுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் சபாநாயகர் நேற்று மாலை கைச்சாத்திட்டு சான்றுப்படுத்தினார்.

நாட்டின் வரலாற்றில் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள பின்னணியில் இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு, அஸ்வெசும கொடுப்பனவு, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்காகவும் பாரிய மேலதிக நிதியை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக செலவிடுவதற்காக அரசாங்கம் கொள்கை வகுத்துள்ளது.

அரச ஊழியர்களுக்காக சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி மாதம் முதல் இடம்பெற வேண்டிய இந்த கொடுப்பனவு செலுத்துகையானது ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நிலுவை கொடுப்பனவானது ஒக்டோபர் முதல் தவணை அடிப்படையில் அரச ஊழியர்களுக்கு செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version