இன்று நள்ளிரவு விண்கல் மழையினை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
தெளிவான வானில் ஒரு மணி நேரத்திற்கு 100 முதல் 120 விண்கற்கள் வரை அவதானிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றிரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு தெளிவான வான் பகுதியில் இதனை அவதானிக்க முடியும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி இந்திக்க மெதகங்கொட தெரிவித்துள்ளார்.
பைதான் மூவாயிரத்து 200 சிறுகோளிலிருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இவ்வாறு நிகழ்வதாக கூறப்படுகிறது.
குறித்த சிறுகோளின் கழிவுகள் வளிமண்டலத்தில் மோதியதன் பின்னர் விண்கல் மழையினை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை அவதானிக்க முடியும்.
ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என கூறப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை காண முடியும்.