யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதி கைமாற்றம்..!

யாழ்ப்பாணம் – கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் அளவீடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நில அளவைத் திணைக்களம் பகிரங்க அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்படவுள்ளது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன் புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் பகுதிகளில் நிலஅளவீடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தொடர்ச்சியாக அளவீடு இடம்பெறும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version