சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 ஆய்வு கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதியளவில் இலங்கையை அண்மிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அடுத்த வருடம் மே மாதம் வரை இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு மற்றும் மாலைத்தீவு துறைமுகங்களில் கப்பலை நங்கூரமிடுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக ஷியான் 6 ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இந்தியாவில் எதிர்ப்பு வெளியிடப்பட்டன.
எவ்வாறாயினும் குறித்த ஆய்வு கப்பல் இலங்கை மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்புகளில் ஆய்வு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.