திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை (17.12) முதல் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டும் ஜூன் 30ம் திகதிக்குள் நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு யார் தடையாக வந்தாலும் தாம் எதிர்க்க தயாராக இருப்பதாக அவர் முன்னரே தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே நாளை முதல் இந்த சோதனை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.