பயங்கரவாத திருத்தச்சட்ட அறிக்கை

பயங்கராவாத ஒழிப்பு சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் அடங்கிய அறிக்கையினை அதனை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நேற்று (15/11) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையின் முதல் பரதியினை குழுவின் தலைவரும் பாதுகாப்பு செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல்குணரத்ன ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் பல்வறு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக கடந்த ஜூன் மாதம் குறித்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பயங்கரவாத திருத்தச்சட்ட அறிக்கை
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version