கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து!

சரிகமப நிகழ்ச்சியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாானந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று (18.12) மாலை அமைச்சரவை நிறைவடைந்த பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைத்தொலைபேசி ஊடாக கில்மிஷாவை தொடர்பு கொண்டு இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், நாட்டிற்கு வருகை தந்ததும் நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக, கில்மிஷா இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்ற போது, எதிர்பாராத விதமாக பலாலி விமான நிலையத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கில்மிஷாவின் பெற்றோர் அமைச்சருக்கு தமது பயணத்தின் நோக்கத்தினை தெரிவித்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கில்மிஷாவை வாழ்த்தி அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள் கில்மிஷா….

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version