அரச வணிக கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு விநியோகிஸ்தர்களிடமிருந்து 15 ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கோழி தீவன தயாரிப்பிற்கு தேவையான மூல பொருட்களுக்கு நாட்டில் தற்போது தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்நிலையில், தற்காலிக தீர்வாக சோளத்தினை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.