முன்னாள் இராணுவ அதிகாரியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வழக்கில் தீர்ப்பை வழங்கி பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இந்தக் குற்றச்சாட்டிற்கு பொறுப்பு என்று கடந்த 14 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. மனுதாரருக்கு நஷ்டஈடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.அத்துடன்,பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டு இது தொடர்பான தீர்ப்பை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்திடமே உண்டு.
இது நடக்குமா என்பதில் சட்டத்தின் ஆட்சியில் அக்கறை கொண்ட அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதனை செய்யுமா என்பது தெளிவின்மையாக அமைந்துள்ளது.ஏனெனில்,நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறியவர்கள் என்ற தீர்ப்பு முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பின் பிரகாரம் இது வரையில் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாரில்லை என்பது அவர்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவனம் செலுத்திய முக்கிய அம்சம் என்னவென்றால்,இதற்கு முந்தைய பல வழக்குகளில் சட்டவிரோத கைது மற்றும் சித்திரவதைக்கு எதிராக சிவில் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் செவிடன் காதில் வீணை வாசிப்பது என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது.இதில் இலங்கை பொலிஸ் துறை கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.இது மரியாதையை பாதுகாத்துக் கொள்ளல் சார்ந்த விடயமாகும். இந்த மரியாதையைப் பாதுகாக்கும் வகையில், தீர்ப்பு தொடர்பாக பொலிஸ் ஆணைக்குழுவால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
இந்த வழக்கின் அடிப்படையிலான சம்பவம் பிரத்தியகமான ஓர் சம்பவம் அல்ல,இது நீண்ட காலமாக நடந்து வரும் நிறுவனச் சரிவின் மற்றொரு நீட்சியே.நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பை நிறைவேற்றும் பொலிஸ் துறை, உண்மையான பொதுச் சேவையை மேற்கொள்ளும் வகையில் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படும் நிறுவனமாக மாற்றும் பொறுப்பை உடனடியாக நிறைவேற்ற பொலிஸ் ஆணைக்குழுவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் உடனடியாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ள ஜனாதிபதியின் பொறுப்பு,சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகும்.நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்து,நாட்டு மக்கள் முன்னிலையில் நீதித்துறையைச் சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டால் அது அவர் செய்த சத்தியப்பிரமாணத்தையும் மீறும் செயலாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்றம் ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சுக்கு வழங்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை புறக்கணித்து செயற்பட்ட ஜனாதிபதி இந்த தருணத்தில் சட்டத்தின் ஆட்சிக்காக முன்நிற்பாரா என்பது கேள்விக்குறியே.
பொலிஸ் மா அதிபர் நியமணத்திற்கு ஒப்புதல் வழங்கும் போது,அரசியலமைப்பு பேரவையில், இது சட்டத்தின் சுதந்திரம் தொடர்பான சிக்கல் நிலையை நேரடியாக எழுப்புவதாலயே ஐக்கிய மக்கள் சக்தி இந்த நியமனத்திற்கு உடன்படவில்லை.
அதிகாரத்திற்காக தனது ஆசையை நிறைவேற்ற நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி,மக்களை அடக்குவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரப் பயணத்தில் ஈடுபட்ட ராஜபக்ச ஆட்சியின் நீட்சியான தற்போதைய ஆட்சியும் தமது அதிகாரத்தை நிலைநிறுத்த இந்த வியூகங்களின் ஊடாகவே முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
இதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறும்,அரசியலமைப்பைப் பாதுகாக்கும், நிறைவேற்று,சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் தடைகள் மற்றும் சமன்பாடுகளை பாதுகாக்கும் ஆட்சியை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும்.
இதற்காக நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கும், மனித உரிமைகளை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும்,சிவில் அமைப்புகளுடனும் இணைந்து மக்களைப் பலப்படுத்த ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியும் கூடிய பங்களிப்பை வழங்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.