ஹப்புத்தளை பெரகல சந்தியில் 18 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெரகல சந்தியில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இரு குழுக்களுக்கிடையேயான வாக்குவாதம் குறித்த மோதலுக்கு வழிவகுத்துள்ளதுடன் இந்த மோதல் காரணமாக பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.