பலமிக்கவர்கள், அதிகாரம் மிக்கவர்கள் பேசினாலும், பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விடுவிக்க தயாராக இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
யார் தாக்கினாலும் ஒரு அடி கூட பின்வாங்க தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோதனையின் போது பொலிஸாரைத் தாக்கினால் பதிலடி கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு மோதரை பிரதேசத்தில் நேற்று (20.12) பிற்பகல் இடம்பெற்ற சமூகக் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் செயலமர்வின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதாள உலகமும் போதைப்பொருளும் முடிவுக்கு வரும் வரை இந்தப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.