ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் விடுவிப்பு..!

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் நாளைய தினம் விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் விசேட பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்களுக்கும், 15 பெண்களும் விடுவிக்கப்படவுள்ளனர்.

இதன்படி, சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியமையினால் சிறையில் உள்ள கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply