கிழக்கில் இதுவரை கண்டறிப்படாத சிவாலய இடிபாடுகள்..!

திருகோணமலையில், இதுவரை கண்டறியப்படாத புராதன சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில் சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் அடர்ந்த வனப்பகுதியில் வவுளாமடு என்னுமிடத்தில்; இடிந்த நிலையிலுள்ள சிவன் கோயில் எச்சங்கள் காணப்படுகின்றன.

மேலும் சிதைவடைந்த இரு சிவலிங்கங்கள், கருங்கற் பொழிவுகள், பாரிய கருங்கற்றூண்கள், கருங்கல் மேடை, தூண்தாங்கு கற்கள் என்பனவும் இப்பகுதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மக்கள் குடியிருப்புகள் காணப்பட்டதற்கான அடையாளங்கள் பெருமளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version