சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சென்ற இலங்கையர்கள் 14 பேர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படகு மூலம் பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்கு சென்ற 7 இலங்கையர்கள் உட்பட 14 பேர் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
21 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களே நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டிற்கு வருகை தந்தவர்களிடம் விசாரணைகள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.