எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் 9 வளைவு பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி யுவதி ஒரவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயிலில் மோதுண்டு குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிதல்எல்ல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.