யாழில் சடுதியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

யாழ்; போதனா வைத்தியசாலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply