மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு!

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட ஒருங்கிணைப்புக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மருந்து வழங்கல் பணிப்பாளர் தலைமையில் குறித்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26.12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (27.12) முதல் அமுலாகும் வகையில் இந்தக் குழு செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தரநிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும், பதிவு காலாவதியான மருந்துகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி வரை மீண்டும் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply