நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு 3 கட்டிடங்கள் முன்மொழிவு..!

நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு பொருத்தமான 3 கட்டிடங்கள் தபால் திணைக்களத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டதையடுத்து தபால் திணைக்களத்தின் தீர்மானத்திற்கமைய தபால் நிலையத்தினை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தபால் நிலையம் அமையப்பெற்றுள்ள பழைய கட்டிடத்தினை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் முதலீட்டு செயற்றிட்டத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தபால் நிலையம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அண்மையில் தபால் ஊழியர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தீர்வுகள் கிடைக்கப்பெறாமை குறிப்பிடத்தக்கது

Social Share

Leave a Reply