யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியின் கரையோரத்தில் அலங்கரிக்கப்பட்ட படகு போன்ற ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், எந்த நாட்டில் இருந்து வந்து கரையொதுங்கியது என்பது தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த படகினை காண மக்கள் குவியும் நிலையில், தற்போது அது கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.