அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, வாகனத்தில் பயணித்தவர்கள் அமைச்சரின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றச் சென்ற வேளையில் மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாகவே இன்று (29.12) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் சொகுசு ஜீப் , தனது காரை சேதப்படுத்தியதாகவும் அதை கண்டு ஆத்திரமடைந்ததில், தாம் தாக்குதல் மேற்கொண்டதாகவும் காரில் பயணித்த கோடீஸ்வர தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version