கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உயர் தரப்பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
.