18% வற்வரி அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் எரிபொருட்களின் விலை அதிகரிக்குமானால், அடுத்த மாதம் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரித்துவரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்கம் பெற்றோல் விலையை உயர்த்திய சந்தர்ப்பங்களில் விலைகளை திருத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆனால் வற் திருத்தத்துடன் விலைகள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.