இந்தியாவிலிருந்து மேலும் 6 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் முட்டைகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முட்டைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
முட்டைகள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுவதால் சந்தையில் முட்டைகளின் விலைகள் குறைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.